யுத்த வலயத்தில் இருந்த காணிகளுக்கு உரிமை கோரலாம்! - THAMILKINGDOM யுத்த வலயத்தில் இருந்த காணிகளுக்கு உரிமை கோரலாம்! - THAMILKINGDOM

 • Latest News

  யுத்த வலயத்தில் இருந்த காணிகளுக்கு உரிமை கோரலாம்!

  எதிர்­வரும் வாரத்தில் இந்த சட்­டத்தை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்து அமுல்­ப­டுத்த இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் இடம்­பெற்ற காலத்தில் கைவி­டப்­பட்ட காணி­க­ளுக்கு உரிமை கோரக் கூடிய வகையில் இவ்­வாறு சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட உள்­ளதாகவும். பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக கைவி­டப்­பட்ட காணி­க­ளையும் இவ்­வாறு உரிமை கோர முடியும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

  பத்து ஆண்­டு­க­ளுக்கு கூடு­த­லாக காணி­யொன்று கைவி­டப்­பட்ட நிலையில் காணப்­பட்டால் அந்தக் காணியை உரிமை கோர முடி­யாது என்­பதே தற்­போ­தைய சட்­ட­மாகும். 30 ஆண்­டு­கால யுத்தம் கார­ண­மாக கைவி­டப்­பட்ட காணி­களை மீளப் பெற்­றுக்­கொள்ள இந்தப் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்­பட உள்­ள­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. யுத்தம் கார­ண­மாக விவ­சாயம் செய்ய முடி­யாத நிலையில் காணப்­பட்ட காணி­களை மீளவும் பெற்­றுக்­கொள்ள இந்த சட்ட திருத்தம் வழியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: யுத்த வலயத்தில் இருந்த காணிகளுக்கு உரிமை கோரலாம்! Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top