Breaking News

இராணுவ பலத்தை அரசியல் பலமாக மாற்றுமாறு பிரபாகரனிடம் கேட்டேன்!- சம்பந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தை அரசியல் பலமாக மாற்றுமாறு தலைவர் தம்பி பிரபாகரனிடம் கேட்டேன் என்று தெரிவித்தார் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2009இற்கு முன்னரும் பல தடவைகள் கிளிநொச்சிக்கு வந்ததாக தெரிவித்த இரா. சம்பந்தன் அப்போது தலைவர் தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்தித்து அரசியல் விடயங்கள் தொடர்பில் உரையாடியெதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கு முன்னரும் 1980களில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞனாக பிரபாகரனை தான் சந்திருந்ததாகவும் அவர் நினைவுபடுத்தினார்.

தமது இயக்கத்தின் இராணுவ பலத்தின் ஊடாகவே தமிழ் தலைவர்களுடன் அரசு பேச இணங்கியதாக தனக்கு பிரபாகரன் சொன்ன போது அது மறுக்க முடியாதது என்று என்று அவருக்கு தெரிவித்ததுடன் உங்கள் இராணுவ பலத்தை அரசியல் பலமாக மாற்ற வேண்டும் என்று அவரிடம் கேடடுக்கொண்டதாகவும் கூறினார்.