வட மாகாண சபையை உடன் கலைத்து விடவும்- ஜனாதிபதியிடம் வேண்டுகோள்
வட மாகாண சபையை உடனடியாக கலைத்துவிட்டு, அதன் அதிகாரத்தை தங்களிடம் எடுத்துக் கொள்ளுமாறு தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மம்பில ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட சமஷ்டி முறைமைக்கான பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை பயங்கரமானது. நாட்டின் அரசியல் யாப்புக்கு எதிரானது. அரசாங்கம் இதில் மௌனம் சாதிக்கக் கூடாது எனவும் அவர் வேண்டுகொள் விடுத்தார்.
1990, மார்ச் 01 ஆம் திகதி இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜ பெருமாள் மாகாண சபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
இதனை அடுத்து அன்றைய ஜனாதிபதியாக பதவி வகித்த ஆர். பிரேமதாச வட கிழக்கு மாகாண சபையைக் கலைத்து மத்திய அரசின் கீழ் மாகாண அரசின் ஆட்சியைக் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








