இரகசிய வங்கிக்கணக்கு - இந்தியா, அமெரிக்காவின் உதவியினை நாடுகிறது இலங்கை
வெளிநாடுகளில் இலங்கையர்கள் வைத்திருக்கும் இரகசிய வங்கிக்கணக்குகள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உதவிகளை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிடுகையில்,
முன்னைய ஆட்சிக்காலத்தில், சக்திவாய்ந்த நபர்களாக இருந்தவர்கள் டுபாயில் வைத்துள்ள வங்கிக் கணக்குகள் குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.பனாமா ஆவணங்கள் வெளியாவதற்கு முன்னரே, அமெரிக்க மற்றும் இந்திய மத்திய வங்கிகளிடம் உதவி கோரப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








