வடக்கு காணிப் பிரச்சினை குறித்து 28ம் திகதி பேச்சுவார்த்தை
வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் 28ம் திகதி பேச்சுவாத்தை நடத்தப்படவுள்ளதாக வட மாகாணசபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட மாகாண காணிப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது.
முதலமைச்சர் திடீர் சுகவீனமடைந்த காரணத்தினால் இந்தப் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.
காணிப் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளது.








