சம்பூர் அனல் மின்நிலைய திட்டம் நாட்டிற்கு ஆபத்து!
இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்களின் உதவியுடன் சம்பூரில் நிர்மாணிக்கப்படவிருக்கும் அனல் மின் நிலையம் அப்பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு மாத்திரம் பிரச்சினையாக அமையப்போவதில்லை. இதனால் எமது முழு நாட்டினரும் எதிர்கால சந்ததியினரும் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ளப்போகின்றனர் என எச்சரிக்கை விடுத்த புத்திஜீவிகள் இது குறித்து தேசிய ரீதியில் தெளிவூட்டும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வும் தெரிவித்தனர்.
அத்துடன் இவ்விவகாரத்தை தமிழ் தேசி யக் கூட்டமைப்பு பிராந்திய அரசியல் நலனுக்காக பார்க்காது அங்குள்ள மக்கள் மற் றும் அவர்களின் நலன் குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
சம்பூர் அனல் மின்நிலையம் நிர்மாணிக் கப்படுமாயின் அதனால் ஏற்படும் சூழலியல் மற்றும் சுகாதார, சமூக பிரச்சினைகள் குறித்து ஊடகவியலாளர்களை தெ ளிவூட்டும் செயலமர்வொன்று நேற்று நாரஹேன்பிட்டியிலுள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபன கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய புத்திஜீவிகளே மேற்கண்டவாறு குறிப்பிட் டனர்.
கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம், சிறுநீரகம் தொடர்பான நிபுணர் டாக்டர் நிலந்தி, சதமரி விஜேதுங்க, ஒடாரா குணவர்த்தன, ஹிரான் ஜயவர்த்தன, சூழலியல் ஆர்வலர் விதுர ரலபன்னவ, நீலா மரிக்கார், அசோக அபேகுணவர்தன மற்றும் டாக்டர் அனில் கப்ரால் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
அவர்கள் மேலும் விளக்கமளிக்கையில்,
சம்பூரில் முன்னெடுக்கப்படவிருக்கும் அனல் மின்நிலையத் திட்டமானது 200 வருடகால பழமைவாய்ந்ததாகும். இந்த திட்டம் நாட்டில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தும். இதனால் பல நாடுகள் இத்திட்டத்தை கைவிட்டுள்ளன. ஆனால் இந்த நவீன தொழில்நுட்ப உலகில் அனல்மின் நிலைய திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவிருப்பது வியப்புக்குரியதாகும். நாட்டில் மின்சாரத்திற்கான தேவைப்பாடுகள் அதிகமாக இருக்கின்றன. எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத நீர் மின் உற்பத்தி மற்றும் சூரியசக்தி மூலமாக மின் உற்பத்தியை ஊக்கப்படுத்தலாம். அதனை விடுத்து இவ்வாறானதொரு நாட்டுக்குப் பொருத்தமற்ற பேரழிவை ஏற்படுத்தும் அனல் மின் நிலைய திட்டத்தை முன்னெடுக்க அனுமதியளிக்க முடியாது.
இத்திட்டத்தினால் சுற்றாடலுக்கும் சுகாதாரத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். இப்பாதிப்புகளினால் சமூக பிரச்சினைகள் பல தோன்றும்.
கொடூர யுத்தத்தால் இடப்பெயர்வு
இப்பகுதியில் நீண்டகாலமாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழர்களின் குடிப்பரம்பலே இப்பகுதியில் காணப்படுகின்றது. எனினும் 2006 ஆம் ஆண்டுகளில் அரச படைகளுக்கும் புலிகளுக்கும் கொடூர யுத்தம் ஏற்பட்டது. கிழக்கை கைப்பற்றும் யுத்தம் இப்பகுதியிலேயே ஆரம்பமானது. இங்கு உக்கிர மோதல்கள் ஏற்பட்டமையினால் மக்கள் அங்கிருந்து இடம்பெயர நேரிட்டது. அங்கு மக்கள் எவரும் இல்லாத சூழ்நிலையிலேயே அரசு அந்நிலத்தை அனல் மின்நிலையத்திற்கு பயன்படுத்த திட்டமிட் டது. கடந்த அரசாங்கம் மக்களை அங்கு மீள்குடியமர்த்துவதில் அசமந்தப்போக்கை கடைப் பிடித்தது. எனினும் புதிய அரசாங்கம் சம்பூரில் மீள்குடியேற்றம் செய்கின்றது.
சுற்றாடலுக்கு பாதிப்பு
சம்பூர் என்பது அனைத்து வளங்களை யும் கொண்ட ஒரு அழகான பிரதேசமா கும். சுற்றுலா துறையினரை கவரக்கூடிய ஒரு பிரதேசமாகும். இந்த கிராமத்தின் பெயரின் அர்த்தம் சம்பூரணமானது. அதாவது அனைத்து வசதிகளையும் கொண்டது. இங்கு அனல் மின்நிலையம் அமைப்பத னால் அச்சூழல் அழிவுறும். அத்துடன் கடும் வெப்பமும் வரட்சியுமான நிலைமை ஏற்படும்.
கடல் அசுத்தமாகும்
அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் இரசாயன மற்றும் திண்மக் கழிவுகள் கடலுக்கு திருப்பிவிடப்படும். இதனால் கிழக்கு கடல் அசுத்தமடையும். மீன் இனங் கள் அழியும். அத்துடன் கிழக்கின் கடல் வளங்கள் அழிவடையும்.
வளி மாசுறும்
அனல் மின் நிலையத்திலிருந்து வெளி யேறும் காபனீரொட்சைட்டு, ஓகன் போன்ற வாயுக்களினால் வளி மாசுறும். இதனால் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாண வான் பரப்பில் அமில வாயு அதிகரிக்கும்.
விவசாயம் பாதிக்கும்
வளி மாசடைவு காரணமாக திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, குருணாகல், வன்னி போன்ற பகுதிகளில் அமில மழை பொழியும் நிலைமை ஏற்படும். இதனால் அங்கு விவசாய நிலங்கள் பாதிப்படையும்.
வாழ்வாதாரம் முடங்கும்
விவசாய நிலம், கடல் வளம் என்பன பாதிக்கப்படுவதனால் கிண்ணியா, மூதூர், வெருகல் உள்ளிட்ட திருகோணமலை மாவட்டத்தின் வாழ்வாதாரம் முழுமை யாக முடங்கும். அத்துடன் வடமத்திய மாகாணம், வடமேல் மாகாணத்திலும் விவ சாய நடவடிக்கை பாதிப்பால் வாழ்வாதரம் ஸ்தம்பிதமடைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.
சுகாதார பிரச்சினைகள்
தற்போது அநுராதபுரம் மாவட்ட மக்கள் சிறுநீரக நோய் பாதிப்பினால் அவதியுறும் நிலையில் அமிலம், இரசாயன பதார்த்தங்கள் விவசாய செய்கை மற்றும் குடிநீர் என்பவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலைமை மேலும் மோசமடையும். ஏற்கனவே நுரைச் சோலை மின்நிலையம் அமைக்கப்பட்ட தன் காரணமாக புத்தளம் பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்த நீர் வழங்கல் சபை தடைவிதித்துள்ளது. இந்நிலைமை கிண்ணியா, மூதூர், சம்பூர் பகுதிகளில் ஏற்படலாம்.
திருமலை துறைமுகத்தை கட்டுப்படுத்தும் திட்டம்
உலகிலுள்ள விசேடமானதொரு துறைமுகமாக திருகோணமலை இயற்கை துறைமுகம் காணப்படுகின்றது. இதனை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு நீண்ட காலமாக இந்தியா, சீனா போன்ற நாடுகளிடையே போட்டி நிலவி வருகின்றது. அந்த போட்டியின் விளைவாகவே அனல் மின்நிலைய திட்டத்தை சம்பூரில் முன்னெடுப்பதில் இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. இத்திட்டத்தை நிறைவேற்றுவதனூடாக திருகோணமலை துறை முகத்தை அவதானிப்பது அவர்களின் நோக்கமாகவும் இருக்கலாம்.
இனப்பிரச்சினை தீர்வும் தேசத்தின் அழிவும்
இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றுக்கு இந்தியா முன்வந்துள்ளது. சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்தை முன்னெடுக்க இந்தியாவிற்கு இடமளிக்காவிடின் சீனா மூலமாக இத்திட்டம் முன்னெடுக்கப்படும். எனவே இந்தியாவிற்கு இடமளிப்பதற்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கிறது. அத்துடன் சம்பூர் பகுதிக்கு அண்மையில் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் இத்திட்டத்தை வேண்டாம் என மக்கள் தெரிவிப்பார்களேயானால் அதனை நான் அரசாங்கத்திடம் எடுத்துக்கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இந்தியாவின் நலனுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படக்கூடாது. சம்பூருக்கும் நாட்டுக்கும் பேரழிவை ஏற் படுத்தும் இத்திட்டத்தை எதிர்க்கட்சி எதிர்க்க வேண்டும்.
அரசியல்வாதிகளின் திட்டமே
சம்பூர் அனல் மின்நிலையத் திட்டம் வெறும் அரசியல் நலன்களுக்கான அரசி யல்வாதிகளின் திட்டமாகவே பார்க்க வேண்டியுள்ளது. இத்திட்டத்தினால் நாட் டின் மின்சார தேவையை மாத்திரம் மையப் படுத்தி பெரும் அழிவை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என்றனர்.








