இன்று முதல் அமுலுக்கு வருகிறது ‘வற்’ வரி
‘வற்’ எனப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி, இன்று (திங்கட்கிழமை) முதல் 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில் மின்சார தொலைத்தொடர்புகள் சேவை, கையடக்க மற்றும் நிலையான தொலைபேசிகளுக்கான உபகரணங்கள், சுகாதார சேவை ஆகியவை இந்த வரித் திருத்தத்திற்குள் உள்ளடங்குகின்றன.
இதுவரையில் தேசிய கட்டட நிர்மாண வரிக்குள் அடங்காத பொருட்கள் மற்றும் சில சேவைகளுக்கும், இம்முறை 2 வீத தேசிய கட்டட நிர்மாண வரி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், குறித்த அதிகரிப்பானது, அத்தியாவசியப் பொருட்கள் மீது அமுல்படுத்தப்படாதென அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. குறித்த வரி அதிகாரிப்பால் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவரத்திப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, கல்விச்சேவைக்கும் குறித்த வரி அறவிடப்பட மாட்டாதென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வரி அதிகரிப்பால், பேக்கரி உற்பத்திகளுக்கான விலையை அதிகரிக்கவுள்ளதாக ஏற்கனவே பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








