அரசாங்கத்துக்குள் தீ, உறுப்பினர்களுக்குள் அதிருப்தி- மஹிந்த
நடப்பு அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்துக்கு ள்ளேயே ஸ்தீரத்தன்மையொன்று இல்லை யென்பது நேற்று முன்தினம் முழு உலகுக்கும் தெரியவந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொட்டியாகும்புர, அருக்கம்மன ஸ்ரீ நாகருக்காராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நிதி தொடர்பான வாக்கெடுப்பின் போது அதில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அவதானிக்கும் போது இந்த உண்மை தெளிவாகின்றது.
நேற்று முன்தினம் நிதி தொடர்பான பிரேரணையின் வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமைக்கு பல காரணங்கள் உள்ளன. அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் கீழால் தீப் பற்றிக் கொண்டிருக்கின்றது என்பது இதற்கான முக்கிய காரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








