யாழ். பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தை அச்சுறுத்திய மர்ம கும்பல்
யாழ்ப்பாண பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தை அண்மித்த பகுதியில் வாள், கைகோடாலி மற்றும் இரும்பு கம்பிகளுடன் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிளில் வன்முறை கும்பல் ஒன்று வர்த்தக நிலைய பணியாளர்கள், மற்றும் வீதியால் சென்றவர்களை அச்சுறுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் முகத்தை கறுப்பு துணியால் மறைத்துக்கொண்டு வாள் கைகோ டாலி மற்றும் கம்பிகளுடன் வந்த 3 பேர் இராமநாதன் வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் நின்றவர்கள் மீது வாளை வீசி அட்டகாசம் புரிந்துள்ளதுள்ளனர்.
இதுமாத்திரமன்றி வங்கி ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்திருந்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை அச்சுறுத்தி பணம் மற்றும் கைதொலைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு மக்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முறைப்பாடு செய்தபோதும் காலதாமதமாக பொலிஸார் வந்ததாக மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
எனினும் இந்தநிலையில் குறித்த வன்முறைக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
இதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை மேற்படி இராமநாதன் வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தகம் ஒன்றிலிருந்தவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.








