Breaking News

தமிழர்களுக்கு சமஷ்டி ஆட்சி மூலமே தீர்வு : சுரேஸ்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மையப்படுத்தி சமஷ்டி தீர்வு திட்டம் தமிழ் மக்கள் பேரவையினால் உருவாக்கப்படடுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த தீர்வு திட்டமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துாதுவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.