Breaking News

ஐ.நாவை விமர்சித்த மஹிந்த : உயிரை காப்பாற்றுமாறு கோரிக்கை

தனது பாதுகாப்பில் இருந்த இரணுவத்தினர் நீக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடு ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளார். இந்த தகவலை இன்று ஞாயிற்றுக் கிழமை தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.   


ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடுகள் மற்றும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐ.நாவின் உதவியை நாடவேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

தனது ஆட்சிக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்து போரை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறும் மஹிந்தவின் பாதுகாப்பில் இருந்த இராணுவத்தினர், கடந்த வாரம் நீக்கப்பட்டு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டனர்.

எனினும் இராணுவ பாதுக்காப்பை நீக்கிய அரசாங்கத்திற்கு எதிராக மஹிந்த ஆதரவாளர்கள் கூச்சலிட்டும், விமர்சனங்களை முன்வைத்தும் வருகின்றனர்.

இவ்வாறே மஹிந்தவின் பாதுகாப்பில் இருந்த இராணுவத்தினர் நீக்கப்பட்டமை தொடர்பாக கடந்த வாரம்  நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மஹிந்த ஆதரவாளர்களிற்கு இடையில் கைகலப்பு இடம்பெற்றது.

இந்த நிலையிலேயே, தனது பாதுகாப்பில் இருந்த இரணுவத்தினர் நீக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடு ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.