Breaking News

10 கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி உதயம்

தமிழ் மக்களின் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதை நோக்காகக் கொண்டு, “ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி” என்ற பெயரில் மற்றுமொரு புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, வீ.ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி, முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேஷனின் ஐக்கிய மக்கள் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி உட்பட பத்து கட்சிகள் ஒன்றிணைந்து இந்த புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு, கொழும்பில் இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.