வடக்கில் உள்ள இராணுவத்தினரை அனுப்புவதல்ல நோக்கம்! வட மாகாண ஆளுநர்
வடக்கில் உள்ள இராணுவத்தினரை அனுப்புவதல்ல நோக்கம் என வட மாகாணஆளுநர் ரெஜினோ ல்ட்குரே தெரிவித்தார்.
நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து கிளிநொச்சி பூநகரிவிக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட கட்டிடம்ஒன்றினை திறந்து வைத்து விட்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் மற்றும்கல்விச் செயற்பாட்டில் இராணுவம் இணையக்கூடாது என்ற குற்றச்சாட்டுக்கள்இருக்கின்றதே இது சம்பந்தமாக உங்களது கருத்துக்கள் என்ன என ஊடகவியலாளர் ஒருவரினால் தொடுக்கப்பட்டகேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும்தெரிவிக்கையில்,
நாங்கள் வடக்கில் உள்ள இராணுவத்தினரை அனுப்புவதல்ல நோக்கம், அவர்களிடமிருந்து வடக்கு மக்கள் என்ன தேவைகளை பெற வேண்டுமோ என்னபிரயோசனங்களை பெற வேண்டுமோ அதனை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இறந்தகாலத்தில் இரண்டு பக்கங்களிலும் இழப்புக்கள் இருந்தன. இரத்த சிந்தல்கள்இருந்தன. அவற்றை மறப்போம்.
கடந்தகால கோபங்கள், வைராக்கியங்கள்எல்லாவற்றையும் மறந்து விடுவோம். கடந்த காலத்தை நாம் எதிர்காலத்திற்கு கொண்டு செல்லமுடியாது.எனவே நாம் எதிர்காலத்தை நோக்கி புதிய ஒரு உலகை நோக்கிபயணிப்போம் என தெரிவித்தார்.
இன்று கிளிநொச்சி மக்களுக்கு விசேடமான ஒரு நாள். அழிந்து போன இடங்களைஇராணுவத்தினர் புனரமைத்து கொண்டுள்ளார்கள். இப்பொழுது உள்ள இராணுவம்யுத்தத்துக்கானது அல்ல. வைராக்கியங்களை உடைத்தெறிந்து அன்புசெலுத்துபவர்களாக உள்ளார்கள்.
இப்பொழுது உள்ள இராணுவம், சமாதான இராணுவம் மற்றும் அபிவிருத்திக்கான இராணுவம் என்ற வகையிலும் ஒற்றுமைக்கான தூதுவர்என்ற வகையிலுமே செயற்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
அவர்கள் மக்களுக்கு சேவைகளைசெய்வது தமது கடமை என்ற வகையில் பணியாற்றிக் கொண்டுள்ளார்கள்.
எனவேஅவர்களது சக்தியையும் பலத்தையும் பெற்று வடக்கை அபிவிருத்தி பாதைக்குகொண்டு செல்வோம் எனவும் தெரிவித்தார்.








