இலங்கையில் மற்றுமொரு புதிய தமிழ் கூட்டணி
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ்த் தலைமைகள் உரிய வகையில் தீர்க்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி புதிய தமிழ் கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இதன் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீ. ஆனந்தசங்கரி, முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேஷன், ஜனநாயக போராளிகள் கட்சி உட்பட்ட சுமார் 10 கட்சிகள் இணைந்து இந்த கூட்டணியை அமைத்துள்ளன.
இந்த கூட்டணி அமைப்பு தொடர்பில் ஏற்கனவே நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில், ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி என்ற பெயரில் இந்த கூட்டணியின் ஆரம்ப செய்தியாளர் சந்திப்பு நாளை முற்பகல் 10 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது.








