மைத்திரி வருகைக்காக சாஞ்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பயணத்தை முன்னிட்டு, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 14ஆம் திகதி, உலகப் புகழ்பெற்ற பௌத்த பாரம்பரியச் சின்னம் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் ராய்சென் மாவட்டத்தில் உள்ள சாஞ்சிக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இங்கு மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய பௌத்த விகாரை ஒன்று உள்ளது.
இங்கு இலங்கை ஜனாதிபதி வருவதை முன்னிட்டு மத்தியப் பிரதேச மாநில பிரதம செயலர் அன்ரனி டேசா, காவல்துறைத் தலைவர் சுரேந்திர சிங் ஆகியோர், நேற்று சாஞ்சிக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்ததுடன், பயணத்துக்கான தயார்படுத்தல்களையும் மீளாய்வு செய்தனர்.








