Breaking News

பாலச்சந்திரனுக்கு சென்னையில் அஞ்சலி



தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைந்த புதல்வர் பாலச்சந்திரனுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பாலச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் வை.கோ, ஸ்ரீலங்காவில் வசிக்கும் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழர்கள் எந்தவொரு பிரிவினையையும் கோரவில்லை எனக் குறிப்பிட்ட அவர், பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்ட தமது சொந்த நிலங்களுக்காகவே அவர்கள் போராடுவதாக தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீலங்காவின் இறுதிக் கட்ட யுத்த காலப்பகுதியில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சில நிழற்படங்களை ஆதாரமாக கொண்டு அவர் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.

எவ்வாறாயினும் பாலச்சந்திரன் மற்றும் ஏனைய விடுதலை புலிகளின் தலைவர்கள் யுத்தத்தின் போது இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் தொடர்ந்தும் கூறிவருகின்றது.



இறுதி கட்ட யுத்தத்தில் பல்லாயிரணக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.