Breaking News

தமிழர் காணிகளை இராணுவம் அபகரிக்கும் முயற்சி முறியடிப்பு!



கிளிநொச்சி, பூநகிரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தில் ஒரு பகுதியை ஸ்ரீலங்கா இராணுவம் அபகரித்து, அவர்களது இராணுவத் தேவைக்குகாகப் பல வருடங்கள் உபயோகித்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை (09) காலை, குறித்த பகுதியை இராணுவம் பதிவுசெய்யும் முயற்சியில் இறங்கியபோது, அது அப்பிரதேச பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 22 ஏக்கர் காணி அபகரிப்பு முயற்சியே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.