Breaking News

ரம்புக்கணவில் மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ரம்புக்கண விகாரையில் தாதுகோபத்தை திறந்து வைக்கச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால், உரிய நேரத்தில் அதனைத் திறந்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ரம்புக்கண திஸ்மல்பொல சிறி சம்புத்த ஜெயந்த கரம விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட தாதுகோபத்தை மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணியினரால் தாக்கப்பட்ட ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் சண்டித் சமரசிங்கவின் ஆதரவாளர்கள், ரம்புக்கண நகரில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் ரயர்களைப் போட்டு எரித்து, சுமார் 2 மணிநேரம் போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் ரம்புக்கண நகரம் வழியாக செல்லாமல், மாற்றுப் பாதைகள் வழியாக மகிந்த ராஜபக்ச விகாரைக்குச் சென்றார்.

அவர் விகாரைக்குச் சென்ற போது தாதுகோபத்தை திறந்து வைப்பதற்காக குறிக்கப்பட்டிருந்த நல்ல நேரம் கடந்து போயிருந்தது குறிப்பிடத்தக்கது.