Breaking News

‘விக்கியின் கையை உடைக்கவேண்டும்’ – வடமாகாண சபை உறுப்பினர்



தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் தொடக்கம் எல்லாவற்றையும் பிளவுபடுத்தி பழக்கப்ப ட்டவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் மாகாண சபையையும் குழப்பி பேரினவாதிகளுக்கு தீனி போடுவதற் வட மாகாண சபையில் சிலர் உடந்தையாக இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

வடக்கு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக வடமாகாண சபையில் உள்ள சுமந்திரன் ஆதரவு உறுப்பினர்கள் சிலர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதற்காக முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.

இது தொடர்பாக யாழிலிருந்து வெளியாகும் யாழ். தினக்குரல் பத்திரிகைக்கு விந்தன் கனகரட்ணம் மேலும் தெரிவித்ததாவது,

“முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக சில குழப்பங்களை செய்ய நினைக்கிறார்கள். மாகாண சபையைக் குழப்பும் திட்டத்தின் ஒரு அங்கமே இது.

இதற்கு ஆதரவு கேட்டு எம்மை தொடர்பு கொள்ளும்போது முதலமைச்சரின் கையை உடைக்கவேண்டும். அதற்கு முதலில் அமைச்சர் ஐங்கரநேசனின் கையை உடைக்க வேண்டும். என ஒரு மாகாணசபை உறுப்பினர் எனக்கு கூறினார்.

இந்த விடயத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தெளிவான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றார்கள். நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று சபையில் கொண்டு வரப்படுமானால் அதனை நாங்கள் நிச்சயமாக எதிர்ப்போம். தோற்கடிப்போம். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை” என்றார்.

“ஐங்கரநேசனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர நினைப்பவர்கள் சுயநல அரசியல்வாதிகள். தங்களுடைய அடுத்தகட்ட அரசியலுக்காக சில அரசியல்வாதிகளின் வாலை பிடித்துக் கொண்டு நின்று ஆடுகிறார்கள்” என மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

“அரசியல் உரிமை பெறவும் நீண்டகால அழிவுகளுக்கான நிவாரணத்தையும், தம் அரசியல் உரிமைகளுக்கான தீர்வினையும் எதிர்பார்த்தே இதை உருவாக்கினார்கள். இதனை மறந்து சுயலாப நோக்கில் செயற்படுபவர்கள் புத்தி பேதலித்தவர்கள். அவர்களுடைய முயற்சியை நாம் எதிர்ப்போம்” எனவும் அவர் கூறினார்.