Breaking News

அதிகம் தற்கொலை இடம்பெறும் நாடுகளில் இலங்கை நான்காவது இடம்

அதிகம் தற்கொலை இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை மேற்கோள்காட்டி சுகாதார அமைச்சு இதனை அறிவித்துள்ளது. உலக நாடுகளில் காணப்படும் மக்கள் தொகைக்கு ஏற்ப அந்நாடுகளில் இடம்பெறும் தற்கொலை வீதம் ஒரு இலட்சம் பேருக்கு 11 வீதமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 

எனினும்இ லங்கையில் ஒரு இலட்சம் பேருக்கு 28.8 வீதமானோர் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நுாற்றுக்கு 50 பேரே மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனையுடன் தொடர்புடையவர்கள். இதுவே அவர்களைத் தற்கொலையின் பால் தூண்டும் காரணியாக காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்த நாட்டிலுள்ள மக்களில் 10 பேரில் ஒருவர் ஏதோ ஒருவகையில் மன நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் இவர்களில் சிகிச்சை பெற்றுக் கொள்பவர்கள் நூற்றுக்கு 20 வீதமானவர்களே எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.