Breaking News

சிங்க கொடியில் உள்ள சிங்கத்தை அகற்ற முயற்சி ; மகிந்த



மக்கள் தலைவலிக்கும் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கல்கிரியாகம, புதுகேஹின்ன புஞ்சி தம்புள்ள ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் சுகாதார சேவைக்கு வரி அறவிடப்படவில்லை எனவும் தற்போது தலைவலிக்கும் மக்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஒன்றிணைத்த நாட்டை துண்டுகளாக பிரித்து. சிங்க கொடியில் உள்ள சிங்கத்தை அகற்ற முயற்சித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் பௌத்த மதத்திற்கு இருக்கும் சிறப்புரிமைகளை இல்லாமல் செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.