மாணவர்கள் கொலை அறிக்கை அடுத்தவாரம் - THAMILKINGDOM மாணவர்கள் கொலை அறிக்கை அடுத்தவாரம் - THAMILKINGDOM
 • Latest News

  மாணவர்கள் கொலை அறிக்கை அடுத்தவாரம்

  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட புலன் விசாரணைகளை மேற்கொண்ட நிபுணர்களின் அறிக்கை அடுத்தவாரம் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரி வித்துள்ளார். 

  பொலிஸ் ஆணைக்குழுவின் விசேட விசாரணையாளர்கள் கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையிலேயே பொலிஸ் ஆணைக் குழுவின் செயலாளர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். 

  மாணவர்களின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவும் நிலையில் பொலிஸ் ஆணைக் குழுவும் தனித்து விசாரணையொன்றை மேற்கொண்டுவரும் நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் பிரத்தியேகமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

  இந்த நிலையிலேயே பொலிஸ் ஆணைக்குழுவின் விசேட விசாரணையாளர்கள் நடத்திய விசாரணையின் அறிக்கையும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப் பட்ட புலனாய்வு அறிக்கையும் அடுத்தவாரம் கிடைக்கும் என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். 

  எவ்வாறாயினும் யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவரின் படுகொலை பாரதூரமான குற்றச்செயல் என்பதால், அது தொடர்பில் விசாரணை செய்யும் அதிகாரம் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு இல்லை என்று தெரிவித்துள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே, எனினும் இந்த சம்பவம் தொடர் பான விசாரணைகளை பொலிஸார் முறையாக நடத்துகின்றனரா என்பதை மேற்பார்வை செய்வதற்கான அதிகா ரம் ஆணைக்குழு விற்கு இருப்பதாகவும், அதற்கமைய தமது ஆணைக்குழு செயற்பட்டு வருவதாக வும் தெரிவித்துள்ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: மாணவர்கள் கொலை அறிக்கை அடுத்தவாரம் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top