Breaking News

மாவட்டத்தை விட்டு பிக்குவை வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின்
அம்பிட்டிய சுமனரத்ன தேரோவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலக முன்பாக உள்ள வீதியோரத்தில் கறுப்பு பட்டி அணிந்து ஒரு மணி நேர பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லையான பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கச்சைக்கொடி கிராமத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்ற முயற்சிகளைத் தடுக்கச் சென்றிருந்த பிரதேச செயலாளர், கிராம சேவை அலுவலர், காணி அதிகாரி உட்பட அதிகாரிகளுக்கு இவரால் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையை கண்டித்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.






இதன்போது கிராம சேவை உத்தியோகத்தரின் தேசிய உடை நிர்வாணமா?, காவியுடையே நீ மதகுருவா மடக்குருவா?, தரம் கெட்டு பேசும் நீ பிக்குவா? மக்குவா?, மதம் பிடித்த காவிக்கு சட்ட நடவடிக்கை உண்டா? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பாதைகளுடன் வீதியோரத்தில் அமர்ந்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ்வாறான பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்