பேஸ்புக் லைவ் வீடியோவால் லைபை தொலைத்த கோரம்
குவைத்தில் பேஸ்புக்கில் நேரடியாக தமது கார் பயணத்தை பதிவேற்றி சென்ற ஒருவர் பலியாகியும் மற்றய இருவரும் மிகவும் ஆபத்தான நிலையிலுமுள்ளதாக அங்கிருந்து தமிழ்கிங்டொத்திற்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குவைத்தில் இன்று மூன்று இந்தியர்கள் தாங்கள் சென்ற காரை அதிவேக ஓட்டி அதை Facebook-யில் Live நேரடியாக பதிவு செய்து கொண்டே வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து பல அடி தூரத்திற்கு தூசி வீசப்பட்டது.வாகனம் நொறுங்கியுள்ளது.இதில் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்,. மேலும் இருவரில் ஒருவர் படுகாயங்களுடன் சபா மருத்துவமனையிலும் மற்றோரு நபர் ஜஹரா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 180 KM TO 200 KM வேகத்தில் வாகனத்தை ஓட்டினார் என்பது விபத்து நடந்த நேரத்தில் பதிவான வீடியோ பதிவில் தெரிகிறது.










