Breaking News

மெனிக் பாம் முகாம், வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற சித்திரவதைகள்

இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது சித்­தி­ர­வ­தை­களும்,
கொடூ­ரங்­களும் பாது­காப்புத் தரப்­பி­னரால் அரங்­கேற்­றப்­பட்­டமை ஒன்றும் இர­க­சியம் அல்ல. அதன் பிர­தி­பலன் இன்றும் இலங்­கையை சர்­வ­தே­சத்தின் முன் மனித உரிமை விவ­கா­ரத்தில் தலை குனிந்து நிற்கும் நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யது என்றால் அதனை மறுக்க முடி­யாது. அதே போன்றே இந்த மனித உரிமை மீறல் விவ­கா­ரங்­களில் இரா­ணு­வத்­துக்கு அல்­லது முப்­ப­டை­க­ளுக்கு எந்­த­ளவு தூரம் தொடர்­பி­ருக்­கின்­றதோ அதற்கு நிக­ரான தொடர்பு அல்­லது பங்­க­ளிப்பு பொலி­ஸா­ருக்கும் உள்­ளது. அதற்­காக திரட்­டப்பட்­டுள்ள ஆதா­ரங்கள் ஏராளம்.

குறிப்­பாக விசா­ரணை எனும் பெயரில் பொலிஸார் அரங்­கேற்றிய பாலியல், உடல் மன ரீதி­யி­லான சித்­தி­ர­வ­தைகள் விப­ரிக்க முடி­யா­தவை. இந்த சித்­தி­ர­வ­தைகள் குறித்து பிர­தா­ன­மாக குற்றச்சாட்­டுக்கள் பொலிஸ் திணைக்­க­ளத்தின் இரு முக்­கிய பிரி­வுகள் மீதே குவிந்­துள்­ளன. அதா­வது பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு ஆகி­யன மீதே இவ்­வா­றான மனித உரிமை மீறல் மற்றும் சித்­தி­ர­வதைக் குற்றச்சாட்­டுக்கள் குவிந்­துள்­ளன.

சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் 59 ஆவது அமர்வு கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழ­மை­களில் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இடம்­பெற்ற போது பொலி­ஸாரின் சித்­தி­ர­வ­தைகள் குறித்து அவ­தானம் செலுத்­தப்பட்­டி­ருந்­தன. இதன் போது தற்­போ­தைய தேசிய புல­னா­ய்வுப் பிரிவின் பிர­தா­னி­யான ஓய்­வு ­பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் வசமாக சிக்­கிக்­கொண்­ட­துடன் அவரால், ஐ. நா. நிபு­ணர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்க முடி­யாமல் போனதை அவ­தா­னித்த போது, இறுதிப்போரின் போதான கொடூ­ரங்கள் அவ­ரது மனச்சாட்­சியை உறுத்­து­கி­றதா என எண்ணத் தோன்­றி­யது.

எனினும் சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் பிர­தி­நி­திகள் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளிடம் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் கடந்த செவ்­வா­யன்று எழுப்­பிய சர­மா­ரி­யான கேள்­வி­க­ளுக்கு உட­ன­டி­யாக எந்த பதிலும் அளிக்­கப்ப­ட­வில்லை. மாற்­ற­மாக கூட்டம் நிறைவ­டைந்து 48 மணி நேரத்­துக்குள் சுருக்­க­மான எழுத்து மூல பதில்­களே சமர்­ப்பிக்­கப்பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது. எனினும் அந்த பதில்­களில் எந்­த­ளவு தூரம் ஐ. நா. சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான நிபு­ணர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்­காக போது­மான திருப்­தி­க­ர­மான பதில்கள் உள்­ள­டக்­கப்பட்­டுள்­ளன என்­பது கேள்விக்குறியே.

இந்த சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான அமர்வில் இலங்கை அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்து சட்­டமா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய தலை­மையில் இலங்கை தேசிய புல­ன­ாய்வுப் பிரிவின் பிர­தானி ஓய்­வு­ பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ், பொலிஸ் சட்டப் பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உள்­ளிட்ட குழு­வினர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இந் நிலையில் ஜயந்த ஜய­சூ­ரி­யவின் பங்­கேற்­புக்கோ அல்­லது அஜித் ரோஹ­ணவின் பங்­கேற்­புக்கோ எவ்­வித எதிர்ப்­பு­களும் எந்த தரப்பில் இருந்தும் வெளி­யி­டப்பட்­டி­ருக்­காத நிலையில் புல­னாய்வுப் பிர­தானி சிசிர மெண்டிஸ் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான ஐ. நா. அமர்வில் பங்­கேற்­ற­மையை அந்த அமர்வின் பிரதிநிதி­களும் ஊடக அமைப்­புக்கள் பலவும் புலம் பெயர் தமிழ் அமைப்­புக்­களும் வன்­மை­யாக கண்­டித்­துள்­ளன. அதற்கு காரணம் உள்­ளது.

அதா­வது இறுதிக்கட்ட யுத்­தத்தின் போது பொலிஸ் தரப்பில் இழைக்­கப்பட்ட யுத்த குற்றங்கள் அல்­லது மனித உரிமை மீறல்கள், சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு பொறுப்பானவர் சிசிர மெண்டிஸ் மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஏனெனில் அவர் அப்­போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் தரத்தில் இருந்­த­துடன் சித்­தி­ர­வ­தை­களின் மைய­மாக விளங்­கிய பயங்­க­ர­வாத புல­னா­ய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வு­க­ளுக்கு பொறுப்­பாக அவரே செயற்­பட்டார். இதுவே அனை­வ­ரது எதிர்ப்­புக்கும் கார­ண­மாகும்.

குறிப்­பாக இலங்­கையின் யுத்­த­கா­லத்தில் இர­க­சிய முகாம்கள் பேணப்­பட்­டதா என்றும் கேள்வி எழுப்­பிய சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் பிர­தி­நி­திகள் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையின் நிலைமை எந்த மட்­டத்தில் உள்­ளது என்றும் வின­வினர்.

மேலும் பல்­வேறு சித்­தி­ர­வதைக் குற்­றச்­சாட்­டுக்கள் எமக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளன. இது தொடர்பில் அரசாங்கம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் என்ன எனவும் சித்­திர­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் பிர­தி­நி­தி­க­ளிடம் கேள்வி எழுப்­பினர். இர­க­சிய முகாம்கள் யுத்­த­கா­லத்தில் இலங்­கையில் இருந்த­தாக எமக்கு அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு இர­க­சிய முகாம்கள் இலங்­கையில் இருந்­தி­ருப்பின் அது எவ்­வாறு நடந்­தது என்று விளக்க முடி­யுமா? எனவும் ஐ.நா. பிர­தி­நி­திகள் கேள்வி எழுப்­பினர்.

இதே­வேளை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு உரிய வச­திகள் செய்­து­கொ­டுக்­கப்­பட்­டுள்­ள­னவா? அவர்கள் தொடர்பில் சட்­ட­ ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதா? பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­கி­வி­டு­மாறு நாம் அர­சாங்­கத்தை கோரி­ வ­ரு­கின்றோம். எனினும் இது தொடர்பில் இது­வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. இது­ தொ­டர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை விளக்­க­மு­டி­யுமா எனவும் இலங்கை அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளிடம் சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் பிர­தி­நி­திகள் வின­வினர்.

அது­மட்­டு­மன்றி கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டில் வெள்­ளைவேன் கடத்தல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக பதி­வா­கி­யுள்­ளன. இவ்­வாறு கடத்­தப்­பட்­ட­வர்கள் சித்­தி­ர­வ­தைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்துள்ளது என்­பதை விளக்க முடி­யுமா எனவும் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

இது இவ்­வா­றி­ருக்க இலங்கை தொடர்­பான விசா­ரணை மேற்­கொண்ட ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்தின் விசா­ரணை அறிக்­கை­யா­னது யுத்­த­கா­லத்தில் அரச படை­யினர் பாலியல் வல்­லு­றவு செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்­ள­தாக குற்­றம்­சாட்­டி­யுள்­ளது. இது தொடர்பில் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் என்ன இவை தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட்­டதா? என்றும் ஐ.நா. பிர­தி­நி­திகள் குழு வின­வி­யது.



அத்­துடன் பொலிஸ் தடுப்­பின்­போது சந்­தே­க ­ந­பர்கள் உயி­ரி­ழந்த சம்­ப­வங்கள் குறித்து குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டதா? இந்த விசா­ர­ணை­களின் முன்­னேற்­றங்கள் எவ்­வாறு உள்­ளன எனவும் இந்த சந்­தர்ப்­பத்தில் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

மேலும் எமக்கு அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ள­வ­கையில் தற்­போது இடம்­பெ­யர்ந்த நிலையில் மிகவும் குறைந்­த­ள­வி­லான எண்­ணிக்­கை­யா­னோரே மீள்­கு­டி­யேற்­றப்­ப­டாமல் இருப்­ப­தாக தெரி­கின்­றது. இது தொடர்­பான நிலை­மையை விளக்க முடி­யுமா? என்றும் தடுப்பு முகாம்­களில் சித்­தி­ர­வ­தைகள் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் சித்­தி­ர­வதை குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து அர­சாங்கம் என்ன நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ளது எனவும் சித்­திர­வ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் பிர­தி­நி­தி­க­ள் கேள்வி எழுப்­பினர்.

இதே­வேளை இலங்கை அர­சாங்கம் ஐ.நா. மனித உரி­மை ­பே­ர­வையில் கடந்த வருடம் இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. அந்த பிரே­ர­ணையின் பிர­காரம் பொறுப்­புக்­கூறல் விசா­ரணை பொறி­முறை தயா­ரிக்­கப்­ப­ட ­வேண்­டி­யுள்­ளது. அந்தப் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையின் முன்­னேற்றம் எவ்­வாறு உள்­ளது. அந்தப் பொறி­மு­றையை எப்­போது முடிப்­பீர்கள் என்று கூற முடி­யுமா? என்றும் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு ஒன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் கூறப்­பட்­டுள்­ளது. அதன் தன்மை குறித்தும் காணா­மல் ­போனார் தொடர்பில் ஆரா­ய­வுள்ள நிரந்­தர அலு­வ­ல­கத்தின் நிலைமை குறித்தும் விளக்க முடி­யுமா எனவும் கேள்வி எழுப்­பப்­பட்­டது. இது இவ்­வா­றி­ருக்க திரு­கோ­ண­ம­லையில் ஐந்து மாண­வர்கள் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்­திலும் மூதூரில் 17 அரச சார்­பற்ற நிறு­வன ஊழி­யர்கள் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­திலும் விசா­ரணை எவ்­வாறு உள்­ளது. இந்த சம்­ப­வங்கள் நடை­பெற்று 10 வரு­டங்கள் கடந்­து­விட்­டன. ஏன் தாம­த­மான நிலைமை காணப்­ப­டு­கின்­றது என்றும் சித்­திரவ­தைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் குழுவின் பிர­தி­நி­திகள் இலங்கை அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளிடம் கேள்வி எழுப்­பினர். அத்­துடன் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நட்­ட­ஈ­டு வ­ழங்கும் செயற்­பாடு எந்த மட்­டத்தில் உள்­ளது என்றும் கேள்­விகள் சர­மா­ரி­யாக சட்­டமா அதிபர் உள்­ளிட்ட இலங்­கையின் பிர­தி­நி­தி­க­ளிடம் எழுப்­பப்­பட்­டன.

எனினும் குறிப்­பாக புல­ன­ாய்வுப் பிரிவின் பிர­தானி சிசிர மெண்­டிசை நோக்கி பல கேள்­விகள் நேர­டி­யாக சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐ. நா. குழு தொடுத்­தி­ருந்­தது. அந்த கேள்­விகள் குறிப்­பாக இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது பயங்­க­ர­வாத புல­னா­ய்வுப் பிரிவு மற்றும் குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வி­னரால் வடக்கில் முன்­னெ­டுக்­கப்பட்ட சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பி­லாகும்.

இந்த கேள்­வி­க­ளா­னது, ஆர்.எஸ்.எப். எனும் எல்­லை­க­ளற்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் அமைப்பு, ஜே.டி.எஸ். எனும் இலங்­கையின் ஜன­நா­ய­கத்­துக்­கான ஊட­க­வி­ய­லா­ளர்கள் அமைப்பு, ஐ.ரி.ஜே.பி. எனப்­படும் உண்மை மற்றும் நீதிக்­கான சர்­வ­தேச மையம் உள்­ளிட்ட அமைப்­புக்­களால் சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான ஐ. நா. குழு­வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள தக­வல்­க­ளுக்கு அமை­வா­கவே தொடுக்­கப்பட்­டுள்­ளன. இக்­கேள்­வி­க­ளா­னது குறிப்­பாக சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு எதி­ரான ஐ. நா. மையத்தின் உறுப்­பி­ன­ரான பெலீஸ் கெயா­ரினால் தொடுக்­கப்பட்­டி­ருந்­தது.

2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு ஜூன் வரை குற்றப் புல­னாய்வுப் பிரிவு மற்றும் பயங்­க­ர­வாத புல­னா­ய்வுப் பிரிவு ஆகி­ய­வற்றின் பிர­தா­னி­யாக சிசிர மெண்டிஸ் கட­மை­யாற்­றி­யி­ருந்­த­மையை அடிப்­ப­டை­யாகக் கொண்டே இந்த கேள்­விகள் அவரை நோக்கி தொடுக்­கப்பட்­டி­ருந்­தன. மேற்­கு­றிப்­பிட்ட இரு பொலிஸ் பிரி­வு­களின் பிர­தா­னி­யாக சிசிர மெண்டிஸ் கட­மை­யாற்­றிய போது வவு­னியா மெனிக் பாம் முகாம் மற்றும் வவு­னியா வைத்­தி­ய­சாலை ஆகிய இடங்­களில் இடம்­பெ­யர்ந்து வந்து தங்­கி­யி­­ருந்த தமி­ழர்கள் சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்­தப்படும் போது அதனை அறிந்­தி­ருந்­தாரா என்­பது தொடர்பில் தீவி­ர­மாக ஆரா­யப்­பட்­டது.

பெலீஸ் கெயர், சிசிர மெண்­டி­ஸிடம் கேள்விக்கணை­களை தொடுக்கும் போது பிர­தா­ன­மாக ஒரு விட­யத்தை மையப்­ப­டுத்­தி­யி­ருந்தார். அதா­வது, இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ. நா. செய­லாளர் நாய­கத்தின் விசேட பிரதிநிதிகள் குழு முன்­னெ­டுத்த விசா­ர­ணையில் பயங்­க­ர­வாத புல­ன­ாய்வுப் பிரிவு, குற்றப் புல­னாய்வுப் பிரிவு ஆகி­யன பாலியல் சித்­தி­ர­வ­தைகள் உட்­பட பல சித்­தி­ர­வ­தை­களை புரிந்­தமை உறு­தி­யா­கி­யுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

2009 ஆம் ஆண்டு மே அல்­லது ஜூன் மாதம் நீர் மெனிக் பாம் முகா­முக்கு நேர­டி­யாக சென்­றி­ருந்­தீரா என்று ஒரு கட்­டத்தில் பெலீஸ் கெயார் நேர­டி­யாக சிசிர மெண்­டி­ஸிடம் வினவ அவர் ஆடிப்­போ­னார். எனினும் இறுதிவரை சிசிர மெண்டிஸ் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு எவ்­வித பதி­ல்க­ளையும் அளித்­தி­ருக்­க­வில்லை.

இத­னை­விட சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் ஜே.எஸ். திஸ்­ஸ­நா­யகம், எழுத்­தாளர் வீ. ஜசி­கரன் மற்றும் அவ­ரது மனைவி வீ. வளர்­மதி,

இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ. நா. செய­லாளர் நாய­கத்தின் விசேட பிரதி நிதிகள் குழு முன்­னெ­டுத்த விசா­ர­ணையில் பயங்­க­ர­வாத புல­ன­ாய்வுப் பிரிவு, குற்றப் புல­னாய்வுப் பிரிவு ஆகி­யன பாலியல் சித்­தி­ர­வ­தைகள் உட்­பட பல சித்­தி­ர­வ­தை­களை புரிந்­தமை உறு­தி­யா­கி­யுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. 2009 ஆம் ஆண்டு மே அல்­லது ஜூன் மாதம் நீர் மெனிக் பாம் முகா­முக்கு நேர­டி­யாக சென்­றி­ருந்­தீரா என்று ஒரு கட்­டத்தில் பெலீஸ் கெயார் நேர­டி­யாக சிசிர மெண்­டி­ஸிடம் வினவ அவர் ஆடிப்­போனார். எனினும் இறுதி வரை சிசிர மெண்டிஸ் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு எவ்­வித பதில்­க­ளையும் அளித்­தி­ருக்­க­வில்லை.

ஊட­க­வி­ய­லாளர் கே. விஜே­சிங்க ஆகியோர் பயங்­க­ர­வாத புல­னாய்­வா­ளர்­களால் கொடூ­ர­மாக சித்­தி­ர­வதை செய்­யப்பட்­டுள்­ள­தாக தெரிவித்தும் கேள்விகள் தொடுக்கப்பட்டன.

இதனைவிட தமிழ் வைத்தியர்கள் நால்வர் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்ட வைத்தியர் துரைராஜா வரதராஜா உள்ளிட்டோர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற கொடூரங்களை வெளிக்கொண்டு வந்தமைக்காக சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்ததாக சித்திரவதைகளுக்கு எதிரான ஐ. நா. குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அத்­தனை சித்­தி­ர­வ­தைகள், கொடூ­ரங்­களை அரங்­கேற்­றி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக இலங்கை அர­சாங்கம் முன்­னெ­டுத்த சட்ட நட­வ­டிக்கை தான் என்ன என ஆராய்ந்தால் அதன் பெறு­பேறு பூஜ்­ஜி­ய­மாகும். இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவும் முன்­னெ­டுத்த சித்­தி­ர­வ­தைகள் பாலியல் கொடு­மைகள் உட்­பட மனித உரி­மைகள் மீறல் விட­யத்­துக்கு அப்­போ­தைய பிரதிப் பொலிஸ் மா அதி­பரும் தற்­போ­தைய தேசிய உள­வுப்­பி­ரிவின் பிர­தா­னி­யு­மான சிசிர மெண்டிஸ் பொறுப்புக் கூற வேண்டியது அவசியமாகும்.

பொறுப்புக் கூறும் கடப்பாட்டுக்கு அமைவாக சிசிர மெண்டிசின் விவகாரத்தை இனிமேலாவது இலங்கை அரசாங்கம் ஆராய வேண்டும். மாற்றமாக பொறுப்புக் கூறும் கடப்பாட்டை அளவீடு செய்யும் இவ்வாறான சர்வதேச அமர்வுகளில் குற்றம் இழைத்ததாக கூறப்படுவோரையே அனுப்பி அவ்வமர்வுகளின் நடவடிக்கையை அவமதித்துவிடக் கூடாது.

– எம். எப். எம். பஸீர் –

முன்னைய கட்டுரைகள்

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்