ஊடகங்களை கண்காணிப்பதற்கு ஆணைக்குழு ஸ்தாபிக்க நடவடிக்கை
அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் (வானொலி மற்றும் தொலைக்காட்சி) மற்றும் இந்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இணையத்தளங்களில் செய்தி உள்ளடக்கங்களை கண்கானிப்பதற்கான சுயாதீன ஆணைக்குழுவினை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முறையான பொதுமக்கள் ஆலோசனை செயன்முறையொன்றை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்ற மறுசிரமைப்பு மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே மேற்படி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில்வான்மை தரத்துக்கு மற்றும் செயற்பாட்டு ஒழுங்கின் அடிப்படையில் செய்தி உள்ளடக்கங்களை கண்காணிப்பதற்கு இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது








