Breaking News

இன மாத ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி ..!!



நாட்டில் மத ரீதி­யா­கவும் இன­ரீ­தி­யா­கவும் விரி­சல்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் ஏற்­ப­டுத்தி நாட்டை அழி­வுக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு சில சக்­திகள் சதிமுயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றமை தொடர்பில் அர­சாங்கம் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது. இது தொடர்பில் அர­சாங்கம் மிகவும் கவ­ன­மா­கவும் பொறுப்­பு­டனும் செயற்­பட்டு வரு­கின்­றது என்­பதை நாட்டு மக்­க­ளுக்கு அறி­விக்­கின்றோம் என்று இணை அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.

தேசிய நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை குழப்பும் இவ்­வா­றான சில சக்­தி­களின் சதிமுயற்­சிகள் தொடர் பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் முழு அர­சாங்­கத்­தி­னரும் அவ­தா­னத்­துடன் இருக்­கின்­றனர் எனவும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

நல்­லாட்சி அர­சாங்கம் பாரிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரும் போது அதனை தடுத்­து­நி­றுத்தி நாட்டை அழி­வுக்கு உட்­ப­டுத்தும் முயற்­சியில் சில சக்­திகள் செயற்­பட்டு வரு­கின்­ற­மையை நாங்கள் அறி­கின்றோம்.

அதா­வது மத ரீதி­யா­கவும் இன­ரீ­தி­யா­கவும் விரி­சல்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் ஏற்­ப­டுத்தி நாட்டை அழி­வுக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு சில சக்­திகள் சதி முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றன. இது தொடர்பில் அர­சாங்கம் ஆழ­மான முறையில் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது.

அந்த வகையில் இந்த விடயம் குறித்து நல்­லாட்சி அஅ­ர­சாங்கம் மிகவும் கவ­ன­மா­கவும் பொறுப்­பு­டனும் செயற்­பட்டு வரு­கின்­றது என்­பதை நாட்டு மக்­க­ளுக்கு அறி­விக்­கின்றோம். அத்­துடன் இவ்­வா­றான சில சக்­தி­களின் சதி முயற்­சிகள் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் முழு அர­சாங்­கத்­தி­னரும் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர்.