யுத்தத்தின் போது நாட்டை விட்டு வௌியேறிய மக்களை மீண்டும் அழைக்க வேண்டும் - பிரதமர்
யுத்தகாலத்தில் இலங்கையில் இருந்து வெளியேறியவர்களை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற சர்வதேச ஆட்கடத்தல்கள் மற்றும் குடிப்பெயர்வு தொடர்பான மாநாடு ஒன்றில் வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
யுத்த காலத்தில் அசாதாரண நிலையை எதிர்கொண்ட பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களை நாட்டுக்க அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் இலங்கையின் எல்லைப் பகுதிகளை சக்திமயப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








