தெற்கிலும் ‘ஆவா’ குழு: சமித தேரர்
தென் மாகாண சபையில் உரையாற்றுகையிலேயே இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், பத்தேகம சமுர்த்தி வங்கி முகாமையாளரை வடக்கின் ஆவா குழு போன்றே ஐவர் கொண்ட குழுவினர் மோட்டார் சைக்கிளில் வந்து தாக்குதல் நடாத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தைத் தடுக்கச் சென்ற பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் தாக்கதலுக்குள்ளாகியதாகவும் இதன் பின்னணியில் அரசியல் சக்திகள் இயங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








