ஐ.எஸ் அமைப்பு தொடர்பில் நீதியமைச்சர் தெரிவித்த கருத்து பிழை
ஐ.எஸ் அமைப்பில் இந்நாட்டவர்கள் 32 பேர் இணைந்துள்ளதாக நீதியமைச்சர்விஜயதாஸ ராஜபக்ஷ அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தின் தகவல்கள் பிழை என அமைச்சரவை ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
தான் இது தொடர்பாக பாதுகாப்பு பிரதானிகளிடம் பெற்று கொண்ட தகவலுக்கு அமைய தகவல்களை முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.பெற்று கொண்ட தகவலுக்கு அமைய நீதியமைச்சர் அந்த கருத்தை தெரிவித்துள்ளதாக கூறிய அவர், நீதியமைச்சரின் கருத்தை நேரடியாக பிழை எனக் கூறவில்லை.
ஊடகவியலாளர்கள் இது தொடர்பாக வினவிய போது, தான் இவ்வாறு கருத்து தெரிவித்தால் அது பிரதான செய்தியாக மாறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.








