படுகொலை செய்யப்பட்ட வவுனியா மாணவர்களின் 10ஆவது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு
வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் ஐவர் படுகொலை செய்யப்பட்ட 10 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா விவசாய கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கல்லூரியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் நினைவாக இராத்ததானம், தாக சாந்தி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கல்லூரி அதிபர், விரிவுரையாளர்கள், கல்லூரி உத்தியோகத்தர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி, வவுனியா, விவசாய கல்லூரிக்கு அண்மையில் இராணுவத்தினர் மீது கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதைதொடர்ந்து, விவசாய கல்லூரியில் நின்ற மாணவர்களை இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 10 மாணவ, மாணவிகள் காயமடைந்தமை நினைவுக்கூரத்தக்கது.








