Breaking News

விடுதலைப் புலிகள் தொடர்பான காங்கிரஸின் நிலைப்பாடு மாற வேண்டும்...! வெடித்தது சர்ச்சை



தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மாற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் பதிவியேற்ற பின்னர் கட்சியை வலுப்படுத்தும் விதமாக மண்டல ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அந்த கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமுதாயத்திற்கு ஏற்ப காங்கிரஸ் கட்சியினர் மாற வேண்டும். பழைய வரலாறுகளை காங்கிரஸ் கட்சியினர் பேச வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சரித்திரத்தை பேசுவதைவிட எதிர்காலத்துக்கு நம்பிக்கை தரும் அரசியல்தான் முக்கியம். சரித்திரத்தை மறந்துவிடுங்கள் என்றோ எந்த ஒரு தலைவருக்கும் எதிராகவோ தாம் பேசவில்லை.

ராஜீவ் காந்தி கொலையை வைத்து காங்கிரஸ் கட்சியினரை அணுகி வருகிறோம். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினறோ 2009ஆம் ஆண்டு சம்பவத்தையே பார்க்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் தொடர்பில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மாறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் கார்த்தி சிதம்பரம் இவ்வாறு கருத்து வெளியிட்டதை தொடந்தது கட்சியினர் ஒரு வித சர்ச்சை ஏற்பட்டுள்ள அதேவேளை, பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது