யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு
யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று 12 மணியளவில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், ஊழியர்களினால் மாவீரர்களை நினைவுகூர்ந்து மரங்கள் நாட்டப்பட்டன.
எதிர்வரும் 27 ஆம் திகதி தமிழினத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கான நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.












