மாவீரர் தினத்தில் வவுனியாவில் இராணுவத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி!!!
முற்றாகப் புறக்கணித்து எதிர்ப்பைக் காட்டுவோம்..
எம் மக்கள் சுயநிர்ணயத்துடனும் கெளரவமாகவும் வாழவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி தாயக விடியலுக்காய் தம் உயிர்களை ஆகுதியாக்கிய எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் இத் தியாக மாதத்தில் வவுனியாவில் இரானுவத்தினரால் திட்டமிட்டு களியாட்ட நிகழ்வொன்று வவுனியா வைரவ புளியங்குளம் சிறுவர் பூங்காவில் எதிர்வரும் 26,27ம் திகதிகளில் நடாத்துவதற்குரிய ஏற்பாடுகள் முழு எடுப்பில் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை இராணுவத்தினரால் இந்நிகழ்வுகளை நடாத்துவதற்கு எமது மக்களிடமே பணம் சேகரித்தாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
யார் இதற்கு அனுமதி வழங்கியது? என்கின்ற போது இதற்கான அனுமதியை வவுனியா நகரசபையின் செயலாளரே என்பது வெளியாகியுள்ளன.இவர் வடமாகாண ஆளுனரின் எழுத்துமூலமான கோரிக்கைக்கு இணங்கவே அனுமதியளித்துள்ளார்.
இலங்கை அரசின் இவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் மீண்டும் எமது மக்களை சீண்டிப் பார்க்கும் செயற்பாடாகவே கருத முடிகின்றது. இச் செயற்பாடானது இலங்கை நல்லாட்சி அரசின் இனவாதத்தை காட்டுவதுடன் தமிழர்களை உதாசீனப்படுத்தும் அல்லது எம்மக்களின் உணர்வுகளை கேவலப்படுத்துவதாகவே இருக்கிறது இது தான் நல்லாட்சியா? இதற்காகவா தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்?
கடந்த கால அரசில் கூட இவ்வாறன நடவடிக்கைகள் பெரும்பாலும் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கதுடன் இதற்கு எதிராக எமது பிரதிநிதிகள் என்ன செய்ய போகிறார்கள்???
இந்தப்பிரச்சினைக்காக முதன் முதலாக குரல் கொடுத்தவர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மட்டுமே. ஏனைய பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஏனைய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களா? அல்லது....,??
எமது பிரதிநிகளிற்கு எமது தமிழ் மக்கள் தமிழ் தேசியம் ஒன்றினைந்த வடக்கு கிழக்கு என்பவற்றை பாதுகாத்து வழங்குவார்கள் என்ற எண்ணத்தில் தான் உங்களுக்கு வாக்களித்து உங்களை அரியணையில் இருத்தினார்கள். இன்று இதைமறந்து எம் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் இந்த அரசில் அங்கம் வகிக்கும் உங்களால் இந்த ஒரு நிகழ்வை கூட தடுத்து நிறுத்த முடியாவிட்டால் “ஏன் ஐயா உங்களுக்கு இந்த பதவி?
எதிர்கால இலங்கை தேசத்தின் எம் இளம் சமூகத்தினரே கடந்தகால எமது இனத்தின் போராட்டங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் எமது கலாச்சாரம் பண்பாடுகளையும், மண்டியிடாத எம் தமிழ் மறவர்களின் வரலாற்றை அழிப்பதற்காகவும் எமது எமது இளம் சந்ததியினரை வேறு தவறான பாதைக்கு இழுத்துச்செல்லவும் திட்டமிட்டு நடாத்தப்படும் இவ்வாறான கேளிக்கை நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்யுங்கள்.
நீங்கள் கெளரவமாகவும், தனித்துவமாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக தமது சுய வாழ்க்கையை உதறி காவியமாகிய காவிய வீரர்களின் சாதனைகளை ஒரு கணம் நினையுங்கள்.
எமது உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தும் இந்த நாட்களில் நாம் இவ்வாறான கேளிக்கை நிகழ்வுகளை தவிர்த்து அவர்கட்கு அஞ்சலி செலுத்துவதென்பது மறைந்த எம் உறவுகளுக்கு வருடத்தில் ஒரு தடவையேனும் செய்யும் வரலாற்று கடமையாகும் என்பதை உணர்ந்து செயற்படுவீர்கள் என்பதை நாமறிவோம். இளைஞர்களாகிய நீங்கள் சிந்தித்து மனச்சாட்சிக்கு பயந்து செயற்படுங்கள் தவறின் நாளை உங்களின் சகோதரிகளுக்கும், பிள்ளைகளுக்கும் கணவனாக வருபவர்கள் பண்டாரவும், அப்பு காமியும்தான் என்பதை மறவாதீர்கள்.
புலிக்கு பிறந்தது பூனையாகாது என்ற மகா வாக்கியத்திற்கு அமைவாக தன்மானத் தமிழர்களாகிய நாம் சிங்கள இராணுவத்தின் கேளிக்கை நிகழ்வை புறக்கணித்து எமது இன ஒற்றுமையையும் சிங்கள நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கு அல்ல என்பதையும் உலகிற்கு காட்டுவோம்.
நாம் ஈழத் தமிழர்
நாம் ஈழத் தமிழர்








