மாவீரர் தினம் பிரேரணை வடமாகாண சபையில் நீக்கம்
மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என கோரி வடமாகாண சபையில் முன்மொழியப்படவிருந்த பிரேரணை சமகால சூழலை காரணம் காட்டி விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 66 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. இதன் போது சபையில் முன்மொழிவதற்காக மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் பிரேரணை ஒன்றை சபைக்கு முன் மொழிய திட்டமிட்டிருந்தார்.
மாகாண சபை அமர்வுக்கு முன்னர் நடைபெற்ற மாகாணசபை உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தில் குறித்த பிரேரணை சமகால சூழலுக்கு பொருத்தமற்றது என கூறியதை தொடர்ந்து பிரேரணை சபையில் எடுத்துகொள்ளப்படமால் விலக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையை விலக்கி கொள்ள மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அனுமதி வழங்கியதாகவும் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.








