போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூறலாம்
அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனை நேற்றைய அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து கூறியுள்ளார்.
எனினும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூறுவதற்கே தடை நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு விடுதலைப் புலிகள் நினைவு கூறப்பட்டால், இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் யாரும் இல்லை என்பதை தேசிய புலனாய்வு பணியகம் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியுள்ளார்.








