Breaking News

தமிழ் மக்களின் ‘மச்சான்’ யார் தெரியுமா? (கண்டிப்பாக படியுங்கள்)



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரி நிருபமாக ராஜபக்ஷ, தமிழரான நடேசனை திருமணம் செய்துள்ளதை சுட்டிக்காட்டிய வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே, ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் மச்சான் என்றும் முரண்பாடுகளை தவிர்த்துக்கொண்டு ஒற்றுமையாக வாழவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பதாம் ஆண்டு நிறைவையொட்டி நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்ற ஆறுமுகநாவலர் மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரெஜினோல்ட் குரே மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

யுத்தம் ஏற்படுவதற்கு மதமே காரணமாக அமைகின்றதென குறிப்பிட்ட ரெஜினோல்ட் குரே, தெய்வங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளனர் என்றும் அவர்களை வணங்கச் செல்பவர்களே சண்டை போடுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு, வெள்ளவத்தையில் அதிகளவில் இந்து ஆலயங்கள் உள்ளபோதும் அது தொடர்பில் பிரச்சினைகள் எழுவதில்லையே என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் காரணமானவர்கள் அரசியல்வாதிகளே என குறிப்பிட்ட ரெஜினோல்ட் குரே, மக்கள் நல்லவர்களாகவே உள்ளனர்” என்றார்.