பிரேசில் கால்பந்தாட்ட அணியொன்றின் வீரர்கள் உள்ளடங்கலாக 72 பேரை ஏற்றிய கொலம்பிய விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
கொலம்பியாவின் மெதேஜின் நகரில் தரையிறங்க முற்பட்ட போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த விபத்தில் யாராவது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்களா என்ற விடயம் இதுவரை தெரியவரவில்லை.
பொலிவியாவில் இருந்து ஷப்பேகுயின்ஸ் கழக கால்பந்தாட்ட வீரர்களை ஏற்றிச் சென்ற விமானமே விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தென் அமெரிக்க கழகங்களுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கென சென்ற வீரர்களே இந்த அனர்த்தில் சிக்கியுள்ளனர்.