Breaking News

நவம்பர் 27 - கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்ற தீர்மானம்



இறந்த எம் உறவுகளை நினைவுகூர்வது நமது அடிப்படை உரிமையும் பண்பாடுமாகும்.

துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றுவதே இலங்கை அரசுக்கு தமிழ் மக்கள் வழங்கக்கூடிய பதில்.

மகிந்த காலத்தில் வீட்டு மூலைக்குள் விளக்கேற்றியதைப்போல இனியும் செய்ய இயலாது. நாளை வெள்ளிக்கிழமை காலை ஏழு மணிக்கு கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தை துப்புரவு செய்ய மாவீரர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் தீர்மானித்துள்ளனர்.

நவம்பர் 27ஆம் திகதி கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்றவும் தீர்மானித்துள்ளனர்.

அனைவரும் நாளை காலை 7மணிக்கு கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் திரண்டு நம் பங்களிப்பை வழங்கி எமக்காக மாண்டு போனவர்களுக்கு ஒரு விளக்கு ஏற்றுவோம்.