யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரம்உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த கல்விச் சமூகத்தினரும், அரசியல் தரப்பினரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று நாளை 28.02.2017 காலை 10.00 மணிக்கு வவுனியா குருமன்காட்டிலிருந்து ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.
இப்பேரணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை வழங்குவதாக அக்கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் அறிவித்துள்ளார்.