தீர்வின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் - THAMILKINGDOM தீர்வின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் - THAMILKINGDOM

  • Latest News

    தீர்வின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்



    கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் இன்று இருபதாவது நாளாக தொடர்கின்றது.

    கடந்த முதலாம் திகதி பலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் வெற்றிபெற்று நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த காணிகளில் கால் பதிப்பதற்கான போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

    இந்த நிலையில் பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இடம்பெற்று வருகின்றது.

    கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்து தொடர் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்துள்ளனர்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: தீர்வின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் Rating: 5 Reviewed By: Tamilkingdom
    Scroll to Top