Breaking News

சிறிதரன் கேட்ட ஆதாரங்கள் மே-18 நிகழ்வின் பின்னர் தருவேன்-சட்டத்தரணி

சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஜீ.எஸ்.பி வரிச்சலுகை
வழங்கப்படவேண்டும் என்பதற்காகவே நான் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு சென்றதாக கூறப்படும் விமர்சனங்கள் பொய்யானவை, அரசாங்கத்திற்கு ஆதரவாகவே நான் அங்கு சென்றேன் என்பதை எவரேனும் நிரூபிப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கவும் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் முகமாக பிரபல சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமாக சுகாஸ் கனகரட்னம் அவர்கள் இப்போது முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெறுவதால் அந்த தியாக வேள்வி முடிவுற்றதும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேட்ட ஆதாரத்திற்கான பதிலை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ஏற்கனவே தமிழ்கிங்டொம் போதியளவான ஆதாரங்களையும் புகைப்படங்கள் உள்ளடங்கலாக செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் அந்த குழுவில் சென்ற பெரும்பாலான உறுப்பினர்களும் தமது முகநூலில் தங்கள் குழுவினர் ஜி.எஸ.பி பிளசிற்காக கடுமையாக பாராளுமன்ற குழுக்களுடன் விவாதித்ததாக குறிப்பிட்டுருந்த வேளையிலும் சிறிதரன் அந்த குழுச்சந்திப்பில் தான் கலந்துகொள்ளவில்லை நான் பக்கத்து அறையிலேயே இருந்தேன் எனத்தெரிவித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

நாளை மறுதினம் ஐரோப்பிய பாராளுமன்ற குழுக்களுடன் என்ன விவாதிக்கப்பட்டது என்பது தொடர்பில் முழுமையான விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.



இது தொடர்பான முன்னைய செய்தி


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்