Breaking News

பெண்ணை முத்தமிட்ட ஈழத்தமிழருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை!

அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுடன்
பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துவந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் அதன் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத்தமிழருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் தி ஏஜ் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் நிலையத்தில் பாதுகாப்பு பணியாளராகப் பணியாற்றிய,  சுமந்திரனின் தீவிர ஆதரவாளருமான தெய்வீகன் பஞ்சலிங்கம் வயது 37 என்பவருக்கே அவுஸ்ரேலிய நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது.

கடந்த காலங்களில் சுமந்திரனுக்கு சார்பாகவும் வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரனுக்கு எதிராகவும் சுமந்திரனுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆஸ்திரேலிய தமிழர்கள் ஈடுபட்டபோது அதனை மிகவும் கேவலாக ஊடகங்களில் எழுதி வசைபாடியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுரைகள் என்ற போர்வையில் அரசுக்கு ஆதரவாக செயற்படும் சுமந்திரனின் கொள்கையை கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ்ப் பத்திரிகைகயிலும் பொங்குதமிழ் இணையத்திலும் எழுதி வந்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஏற்கனவே தமிழ்கிங்டொம் கடந்த ஆண்டு அவுஸ்ரேலிய அகதிமுகாமில் மன்மதலீலை-தமிழ் அதிகாரி பணிநீக்கம்!!  என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டிருந்தோம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

2015ஆம் ஆண்டு ஜூலை ஓகஸ்ட் மாதங்களுக்கிடையில், பெண் புகலிடக் கோரிக்கையாளரை தனது பணியக அறைக்குள் அழைத்து கதவைத் தாளிட்டுக் கொண்டதாகவும், அவரை முத்தமிட்ட பின்னரே வெளியேற அனுமதித்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

குற்றச்சாட்டுக்குள்ளானவரும் ஒரு புகலிடக் கோரிக்கையாளராவர். அவர் 2014ஆம் ஆண்டு மெல்பேர்ன் மருத்துவமனையில் பணிக்குச் சென்ற போதும், சக பணியாளரை முத்தமிட்டதாக குற்றச்சாட்டு இருப்பதாகவும், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இத்தகைய செயல்களை பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களாக கணித்து, குற்றம்சாட்டப்பட்டவருக்கு புரோட்மிடோஸ் நீதிவான் நீதிமன்றம், ஒரு மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

அத்துடன், 18 மாத சமூக சீர்திருத்த திட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் நீதிவான் தீர்ப்பளித்துள்ளார்.

இதற்கமைய, ஒரு மாத சிறைத்தண்டனை முடிந்த பின்னர், 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கான சீர்திருத்தத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவரது கட்டுரையின் ஒரு பகுதி


குறித்த நபர் கடந்த தேர்தல் காலத்திலிருந்து சுமந்திரனின் தீவிர ஆதரவாளராகவும் முதலமைச்சருக்கு எதிராகவும் மிகக்கடுமையாக செயற்பட்டிருந்தார் என்பதோடு சுமந்திரனின் அவுஸ்ரேலிய பிரச்சார வேலைகளுக்கு முகவராகவும் இருந்துள்ளார். அத்தோடு இவர் கடந்தகாலத்தில் சுடரொளி பத்திரிகைக்கும் அண்மையில் கொழும்புமிறர் பத்திரிகையிலும் சுமந்திரனுக்கு ஆதரவாகவும் முதலமைச்சருக்கு எதிராகவும் அவுஸ்ரேலியாவில் வாழும் ஈழத்தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியும் எழுதியிருந்ததோடு கடந்த ஆண்டு தமிழினியின் கூர்வாளின் நிழலில் நூல் வெளியீட்டையும் நடாத்தி தன்னை ஒரு சமூக செயற்பாட்டாளராகவும் காட்டியிருந்தார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

செய்தி மூலம் -தி ஏஜ் நாளிதழ் 


அவுஸ்ரேலிய அகதிமுகாமில் மன்மதலீலை-தமிழ் அதிகாரி பணிநீக்கம்!!


அவுஸ்ரேலிய மன்மதன் தலைமையில் சர்வதேச பெண்கள் தினம்(விபரம் முழுமையாக)


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்