Breaking News

கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பை மறந்து விட்ட மஹிந்த



பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த12 ஆம் திகதி இடம்பெற்ற சர்வதேச வெசாக் தின நிகழ்வில் கலந்துகொள்ள வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சபைக்கு வருகை தரும்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரியாதை செலுத்துவது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

கூட்டு எதிர்க் கட்சி இந்த சர்வதேச வெசாக் தினம் தொடர்பில் எதிரான பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. இதில் கலந்துகொண்டிருந்தார்.

சர்வதேச வெசாக் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க கறுப்புக் கொடிகளைப் பறக்க விடுமாறு கூட்டு எதிர்க் கட்சியினால் கூறப்பட்டிருந்தது. அத்துடன், பௌத்தர்களின் சர்வதேச நிகழ்வுக்கு பௌத்தர் அல்லாத ஒருவரை அழைத்துள்ளமை, உலகில் பௌத்த தலைவர் ஒருவர் இல்லையென்ற செய்தியை இந்த அரசாங்கம் உலகிற்கு பறைசாற்றியுள்ளது எனவும் கூட்டு எதிர்க் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

வெசாக் தின நிகழ்வு எனும் போர்வையில் ஒப்பந்தங்களை செய்யவே இவர் வருகின்றார். இந்தியாவுக்கு நாட்டின் நிலங்களை தாரைவார்க்கப் போகின்றது இந்த அரசாங்கம் எனவும் கூட்டு எதிர்க் கட்சி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தது