Breaking News

தபால் தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது



தபால் தொழிற்சங்கங்களின் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பில் 28 தபால் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள 3,410 உப தபால் அலுவலகங்களிலும் 640 தபாலகங்களிலும் இன்று சேவைகள் இடம்பெறாது என தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.

எனினும், அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகளை இரத்து செய்துள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

தபால் திணைக்களத்திற்கு சொந்தமான சில பழைமையான கட்டடங்களை சுற்றுலா விடுதிகளாக மாற்றும் முயற்சி உள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்ற போதிலும் அத்தகைய எவ்வித திட்டமும் இல்லை என தபால் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

பதவி உயர்வு விடயத்தில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளதாகவும் அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்றைய தினம் தபாலகங்களின் சேவைகள் தடைப்படலாம் எனவும் தபால் மாஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.