மாகாணசபை கலைக்கப்படலாம் -விக்கி தீவிர ஆலோசனை(காணொளி) - THAMILKINGDOM மாகாணசபை கலைக்கப்படலாம் -விக்கி தீவிர ஆலோசனை(காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  மாகாணசபை கலைக்கப்படலாம் -விக்கி தீவிர ஆலோசனை(காணொளி)

  இலங்கை தமிழரசுக் கட்சி கூடி ஈ.பி.டி.பி தவராசா மற்றும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அடங்கலான 22பேர் முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஆளுனரின் அனுமதி கோரி கையொப்பமிட்டு மனுவொன்று சமர்ப்பித்துள்ள நிலையில் மாகாணசபை அரசியலில் பல திருப்பங்கள் எதிர்வரும் நாட்களில் நடக்கவுள்ளதாக தமிழரசுகட்சி தரப்பில் எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில் அதற்கு வடமாகாண முதலமைச்சர் தனது நகர்வுகளை எப்படி செய்வார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று புதிய செய்திகள் வெளியாகியுள்ளது.


  தமிழரசுக்கட்சி த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஆதரவு போதாததால் ஈ.பி.டி.பி மற்றும் முன்னாள் இராணுவ தளபதி சத்துருசிங்கவால் களமிறக்கப்பட்ட சுதந்திரக்கட்சி உறுப்பினர் அகிலதாஸ் மற்றும் ஜவாகர்,செனிவிரத்ன,ஜெயதிலக ஆகியோர் உட்பட அமைச்சர்களான குருகுலராஜா,சத்தியலிங்கம்,டெனீஸ்வரன் மற்றும் அவை தலைவர் சீ.வீ.கே மற்றும் சயந்தன்,சுகிர்தன்,ஆனல்ட்,அஸ்மின்,பரஞ்சோதி,அரியரத்தினம்,பசுபதிப்பிள்ளை ஆகியோர் அடங்கலாக 22பேர் ஒப்பமிட்டுள்ளதாக தமிழ்கிங்டொம் உறுதிப்படுத்தியுள்ளது.

  இவர்களின் முதல்வர் கனவை முதலமைச்சர் நிறைவேற்ற இடம்கொடுப்பாரா என முதலமைச்சு வட்டாரங்களை அணுகியபோது முதலமைச்சரின் அடுத்த நகர்வுபற்றி அறியக்கிடைத்தது. மாகாணசபையை முதலமைச்சரின் திட்டப்படி கொண்டுநடாத்த தமிழரசுகட்சி சதி செய்தால் மாகாணசபையை தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கலைக்கமுடியும் என்ற ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவ்வாறு முதலமைச்சர் செய்யும்போது தமிழரசு கட்சியின் பதவி வெறியையும் சுதந்திரக்கட்சியுடனான தமிழரசு கட்சியின் உறவையும் தோலுரித்து காட்டிவிட்டே சபையை கலைப்பார் என்றும் தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது.

  இவர்களின் இந்த சூழ்ச்சி அரசியலால் முதலமைச்சரின் அடுத்த அரசியல் பாதையும் தயாராகும் நிலைக்கு வந்திருப்பதாகவும் அவர் மாகாணசபையை கலைக்கும் பட்சத்தில் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தனக்கான ஒரு புதிய அரசியல் அணியை ஊருவாக்கும் செயலில் இறங்குவார் எனவும் அது தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்றுவதா அல்லது புதிய ஒரு கட்சியை தொடங்குவதா என்பதுபற்றி சல தரப்புக்களுடன் முதலமைச்சு வட்டாரங்கள் பேசிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  தொடர்புடைய முன்னைய செய்தி

  முதல்வரை மாற்றுவது பற்றி ஆளுனருடன் பேச்சுவார்த்தை

  சத்தியலிங்கத்தை முதல்வராக்க திட்டம்-களம் இறங்கியது தமிழரசு

  விக்கினேஸ்வரனுக்கு எதிராக கறுப்பாடுகள் புகுந்தது எப்படி?-சிறிதரன் விளக்கம்(காணொளி)


  முதலமைச்சரையும் வீட்டுக்கு அனுப்புவோம் மாவை முழக்கம்


  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மாகாணசபை கலைக்கப்படலாம் -விக்கி தீவிர ஆலோசனை(காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top