Breaking News

உடைகிறது தமிழரசுக்கட்சி மேலும் இருவர் முதல்வர் பக்கம்

ஈபிடிபி. சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ரிசாத்
பதியுதினுடன் இணைந்து தமிழரசுக் கட்சியானது முதலமைச்சரை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்திற்கு தாம் உடன்படப்போவதில்லை என கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை அவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரமற்ற அறிக்கையை வைத்து அமைச்சர்கள்மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துவிட்டார் என்ற கோபத்தில் இருந்தபோது நீங்களும் மாவையும் எங்களை தவறாக வழிநடத்திவிட்டீர்கள் என சிறிதரனிடம் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஆதாரமற்ற அறிக்கைக்காகத்தான் தாம் முதலமைச்சரை எதிர்த்தாகவும் எதிரியுடன் இணைந்து முதல்வரைக் கவிழ்ப்பதை தாம் எதிர்ப்பதாகவும்
சிறிதரனிடம் தெரிவித்துள்ளனர். எமக்கு பிந்திக் கிடைத்த தகவலின்படி யாழ் நாவலர் மண்டபத்தில் இருக்கும் அரசியல்வாதிகளைக் கண்காணிக்கும் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக் குழுவினர் விலைபேசப்பட்டு இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக பொய்க் குற்றச்சாட்டுக்களுடன் அறிக்கையைத் தயாரித்து முதல்வரைச் சிக்க வைக்கும் திட்டம் அரங்கேற்றப்பட்டதாகவும் இதற்கெல்லாம் முழு அனுசரணை தமிழரசுக் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் என்றும் பசுபதிப்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.

இப்படியான கீழ்த்தரமான செயற்பாட்டுக்கெதிராக யாழ்மாவட்டத்தில் அதிக விருப்பு வாங்கிய முதலமைச்சருக்காக நீங்களும் குரல்கொடுக்கவேண்டும் என்று இருவரும் சிறிதரனிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்கிங்டொம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் வடமாகாண சபையில் முதலமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் முதலமைச்சருக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகவும் முதல்வருக்கு ஆதரவான நிலைப்பாட்டை சிறிதரன் எடுக்காவிட்டால் சிறிதரனுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்றும் இருவரும் வலியுறுத்தியுள்ளனர். 

இதற்குப் பதிலளித்த சிறிதரன் முதல்வருக்கு ஆதரவாக இருவரும் வாக்களிப்பதில் தனக்கு பிரச்சினையில்லை என்றும் தன்னை இப்போது வெளிப்படையாக முதல்வரை ஆதரிக்கச் சொல்ல வேண்டாம் என்றும் காலம் கனியும்போது முதல்வருடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடர்வேன் என்றும் சிறிதரன் பதிலளித்துள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பாக இதுவரைகாலமும் முதலமைச்சரின் செயற்பாடுகளுக்கு தனது பூரண ஒத்துழைப்புகளை வழங்கிவந்த பசுபதிப்பிள்ளை அவர்கள் தனது முகநூல் வாயிலாகவும் வருத்தத்தை தெரிவித்துள்ளதோடு ஒருபோதும் சுமந்திரனின் துரோகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டேன் என்றும். நடந்தவற்றுக்கு வருந்துவதாகவும் நடப்பவை நல்லவையாக நடக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.




தொடர்புடைய முன்னைய செய்திகள்



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்