ஆதரவாளர்களை கண்டு மனம் உருகிய விக்கினேஸ்வரன்(காணொளி) - THAMILKINGDOM ஆதரவாளர்களை கண்டு மனம் உருகிய விக்கினேஸ்வரன்(காணொளி) - THAMILKINGDOM

 • Latest News

  ஆதரவாளர்களை கண்டு மனம் உருகிய விக்கினேஸ்வரன்(காணொளி)

  முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து இன்று இளைஞர்களால்
  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலமைச்சரின் வீட்டிற்குச் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

  இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

  எனக்கு என்று அரசியல் ரீதியாக பலத்தை சேர்த்து வைக்கவில்லை, பொது மக்களுக்கு செய்யும் சேவைதான் எனக்கு இருக்கும் பலம் எனக்கு இருக்கும அன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  நான் ஒரு முடிவை எடுத்தேன் அது எனது அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என ஒரு பயமிருந்தது ஆனால் இப்போது உங்கள் ஆதரவை பார்க்கும்போது எனக்கு எந்த பயமும் இல்லை நீங்கள் என்னோடு இருக்கும்போது எதற்கும் பயப்பிடமாட்டேன் எனத் தெரிவித்தார்.


  எனக்கு என்று அரசியல் ரீதியாக பலத்தை சேர்த்து வைக்கவில்லை, பொது மக்களுக்கு செய்யும் சேவைதான் எனக்கு இருக்கும் பலம் எனவும் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன் உங்களோடு எப்போதும் நான் இருப்பேன்.

  மேலும், உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள். நடப்பதை இருந்து பார்ப்போம் எனவும் முதலமைச்சர் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.  விக்கினேஸ்வரனுக்கு எதிராக கறுப்பாடுகள் புகுந்தது எப்படி?-சிறிதரன் விளக்கம்(காணொளி)


  முதலமைச்சரையும் வீட்டுக்கு அனுப்புவோம் மாவை முழக்கம்
  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஆதரவாளர்களை கண்டு மனம் உருகிய விக்கினேஸ்வரன்(காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top