Breaking News

முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரன் நீக்கப்பட்டால் வடக்கு கிழக்கு மாகாணம் கொந்தளிக்கும்



வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி நீக்குவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்த முடிவால் தமிழ் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

இவரை பதவியில் இருந்து நீக்குமாறு 17 உறுப்பினர்கள் கையெழுத்துடன் கடிதம் ஒன்று ஆளுநர் றெஜினோல்ட் கூரேயிடம் கையளிக்கப்பட்டது.

இச்செய்தி பரவியதும் தமிழ் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். தமிழரசுக் கட்சியின் இக் கொடுஞ்செயல் கண்டு பொது அமைப்புக்கள் கோபாவேசம் அடைந்துள்ளது.

தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக மதிக்கப்படும் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து அவரை பதவி நீக்கம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இந்த விடயத்தில் நிதானமாக நடந்தது கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரன் நீக்கப்பட்டால் வடக்கு கிழக்கு மாகாணம் கொந்தளிக்கும். ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கடையடைப்புக்கள், வீதிமறிப்புக்கள் என எங்கும் அல்லோலகல்லோலம் ஏற்படும்.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் செயலை கண்டித்து பூரண கடையடைப்பு மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் பொது அமைப்புகள் இதற்கான முன்னெடுப்பை செய்வதாகவும் தகவல்கள் வந்தவண்ணமுள்ளன.