வித்தியா கொலை வழக்கில் இன்றிலிருந்து - எதிரிகளின் வாக்குமூல பதிவு ஆரம்பம். - THAMILKINGDOM வித்தியா கொலை வழக்கில் இன்றிலிருந்து - எதிரிகளின் வாக்குமூல பதிவு ஆரம்பம். - THAMILKINGDOM
 • Latest News

  வித்தியா கொலை வழக்கில் இன்றிலிருந்து - எதிரிகளின் வாக்குமூல பதிவு ஆரம்பம்.

  புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் நீதாய விளக்க முறையிலான (ட்ரயலட்பார்) விசார ணைகளின் தொடர் விளக்கத்தில், வழக்கின் எதிரிகளுடைய வாக்குமூல பதிவுகள் இன்றில் இருந்து ஆரம்பி க்கப்படவுள்ளது. 

  இவ் வழக்கின் நீதாய விளக்க (ட்ரயல ட்பார்) விசாரணைகள், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் திரு கோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பா ணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 9.00 மணிக்கு யாழ் மேல் நீதிமன்றின் மூன்றாம் மாடியில் ஆரம்பமாகியுள்ளது.

  வழக்கு தொடுநர் தரப்பில் பிரதி மன்றாதிபதி பி.குமாரரட்ணம் மற்றும் அரச சட்டவாதிகளான நாகரட்ணம் நிஸாந், ஜெயலக்ஸி சில்வா, மாதுரி விக்னேஸ்வரன் ஆகியோர் நெறிப்படுத்தி உள்ளனர். 

  வழக்கு தொடுநர் தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்றில் இருந்து எதிரிகளின் வாக்குமூலம் மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சியங்கள் பதிவுசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வித்தியா கொலை வழக்கில் இன்றிலிருந்து - எதிரிகளின் வாக்குமூல பதிவு ஆரம்பம். Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top